சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஒரே நேரத்தில் நிகழும் சந்திரன் உதயம் மற்றும் சூரியன் மறைவதினை காண குமரி முனையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆண்டு தோறும் சித்திரா பௌர்ணமி அன்று மட்டுமே வானில் சந்திரன் உதயமாவதும் சூரியன் மறைவதும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தெரியும் ஆபூர்வ காட்சி நடைபெறும். உலகில் ஆபிரிக்கா நாட்டின் அடர்ந்த காட்டுபகுதியிலும், கன்னியாகுமரியிலும் மட்டுமே இந்த அதிசிய நிகழ்வை காண முடியும். இதனால் அதை காண முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மழை மேகங்கள் சூழ்ந்ததன் காரணமாக சூரியன் மறையும் நிகழ்வு தெளிவாக தெரியவில்லை எனினும் சந்திரன் உதயத்தை பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.