நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையகத்தில் மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது, நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், சட்டமன்ற இடைத் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.