விழுப்புரத்தில் உயிரிழந்த தந்தை முன்னிலையில் திருமணம் செய்த காதல் ஜோடி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு, ஜெகதீஸ்வரி என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி உடல் நலக்குறைவால், திடீரென உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அலெக்சாண்டரின் குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்தனர். தந்தையின் கையால் தாலி எடுத்து, திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய அலெக்சாண்டர், உயிரிழந்த தந்தை தெய்வமணி முன்னிலையில், கண்ணீர் மல்க திருமணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியது.

Exit mobile version