சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள, சிட்கோ பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் மகேந்திரன். இவர், உறவினரின் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, மகேந்திரனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மகேந்திரன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version