தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்திடம் இருந்து கிடைக்கும், அம்பர்கீரிஸ் என்ற மெழுகு போன்ற பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் சாலையில் போலீசார் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காருக்குள், ஒரு பையில் மெழுகு போன்ற பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து நடத்திய விசாரணையில், அவை திமிங்கலங்கள் உமிழக் கூடிய அம்பர்கீரிஸ் என்பதும், வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் இந்த பொருளின் சர்வதேச மதிப்பு 2 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காரில் இருந்த தஞ்சை மாவட்டம் பாளையம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த இளங்கோவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.