"மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது" – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, கோவையில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நாளை முதல் 9ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version