வாழைப்பழ சூறை திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

வத்தலக்குண்டு அருகே நடந்த வாழைப்பழ சூறை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டியில், பழமைவாய்ந்த சோலை அழகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்றிய பிறகு வாழைப்பழத்தை காணிக்கையாக தருவது வழக்கம். இவ்வாறு சேகரிக்கபட்ட வாழைப்பழத்தை கூடை, மாட்டுவண்டி, வேன் போன்றவற்றில் இருந்து சூறையிடுகிறார்கள். இந்த சூறை திருவிழாவில் பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version