தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனுஷ்கோடி கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1964 ம் ஆண் டு டிசம்பர் 22-ம் தேதி இரவில் வீசிய கடும் புயலால் தனுஷ்கோடி நகரமே அடியோடி அழிந்தது. அங்குவாழ்ந்த மக்கள் நீரில் மூழ்கி இறந்தனர். பயணிகள் ரயில் ஒன்றும் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த கோர சம்பவத்தை நினைவுகூறும் வகையில், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமானோர், கடலில் மலர்தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர்.