உலகத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து ஒரு பார்வை!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முக்கிய மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பை தற்போது காணலாம் …

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சிறுவன் ஒருவன் மழலை மொழியில் தேசிய கீதம் பாடும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், இந்த வீடியோ தனக்கு உற்சாகத்தை அளிப்பதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனந்த் மகிந்த்ரா பகிர்ந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரோன்களை கண்டுபிடித்து அழிக்கும் பிரத்யேக கருவி, முதன்முறையாக டெல்லி செங்கோட்டை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. டிஆர்டிஓவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி டிரோன்களின் தகவல் தொடர்பை துண்டிப்பதுடன், லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்திய சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் சுதந்திர தினம் கொண்டாடினர். தேசிய கொடியை தாங்கிப் பிடித்தவாறே பாரத் மாதாகி ஜெய் என முழக்கங்களை எழுப்பினர்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து விளையாட அச்சப்படுவதாக முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் விமர்சித்துள்ளார். இங்கிலாண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஏற்கனவே தோல்வியைத் தழுவிய நிலையில் 2 வது போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் அணியை, முன்னாள் கேப்டன்  இன்சமாம் உல் ஹக் கடுமையாக விமர்சித்து உள்ளார். பாகிஸ்தான் வீரர்கள், பேட்டை கால்களுக்கு பின்புறமே வைத்துள்ளதாகவும், அதிரடி ஆட்டத்தை காட்ட அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்

இளம்பெண் ஒருவர் ஸ்டைலாக தேநிர் பரிமாறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேநீர் நிரப்பிய குப்பியை தலைக்கு மேல் கொண்டு செல்லும் அவர், கீழே கொட்டாமல் குவளைகளில் தேநீர் ஊற்றுகிறார். இளம்பெண்ணின் வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளித்தந்து வருகின்றனர்.

 

 

 

Exit mobile version