ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களில் கால்நடை ஆம்புலன்ஸ் வசதி

ஜல்லிக்கட்டு போட்டியின் போது, காயம் ஏற்படும் காளைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் கால்நடை ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்தில் அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியது புதுக்கோட்டை மாவட்டம் தான் என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என அமைச்சர் கூறினார்.

வரும் ஆண்டு முதல், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களில் கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என்றும், காயமடையும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version