ABUSEIVE சைக்கோ மதனின் ரசிகர்களுக்கு ஓர் அன்புக் கடிதம்

வாயை மட்டுமே வைத்து வாழ்க்கை நடத்திய மதனுக்கு இது போதாத காலம். மாதம் 4 லட்சம் ரூபாய் வருமானம். 8 லட்சம் சப்ஸ்கிரைபர் என புயல் வேகத்தில் போய்க் கொண்டிருந்த அவரின் ராஜபோக வாழ்வு தற்போது வீதிக்கு வந்திருக்கிறது.

சமூகம் எதை கேவலம், அருவெறுப்பு என்று வரையறுத்து உள்ளதோ, அதில் ஆர்வம் கொள்வதுதான் எழுத்தாளர் நாகராஜன் சொன்னதைப் போல மனிதன் எனும் மகத்தான சல்லிப்பயலின் இயல்பு. அதன்படி பப்ஜி கேமிற்கு டிப்ஸ் வகுப்பெடுக்க பல good boys யூ டியூப் சேனல் நடத்தி வந்தாலும் மதன் என்னும் bad boy ஐ நோக்கிதான் விடலைகள் ஹார்ட் விட்டார்கள். அவன் பேசும் அப்யூஸிவ் வார்த்தைகளை கேட்க லைவில் அலைமோதியது இளைஞர் படை.

இடை இடையே கேவலமாக பேசும் இந்த சேனல் வீடியோவிற்கே இவ்வளவு வரவேற்பு என்றால் கேவலத்தை மட்டுமே பேசுவதற்கு ஒரு சேனல் தொடங்கினால்..

அப்படி உருவானதுதான் டாக்ஸிக் மதன் 18+ என்ற சேனல். அதில் கேம் என்பது மருந்திற்கு கூட இல்லை. முழுக்க முழுக்க ஆபாசம். ஆனால் கொடுமை என்னவெனில் அந்த அப்யூஸிவ் சேனலுக்கு பழைய காட்டிலும் பலத்த வரவேற்பு. வரவேற்பு மட்டுமல்ல வருமானமும் கூட…

அரசியல் நையாண்டியில் அதகளம் செய்த இயக்குநர் மணிவண்ணன்…

இதுவரை பொது வெளியில் முகம் காட்டாத மதனுக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள்.. இல்லை ஆயிரக் கணக்கில் அடிமைகள் இருக்கிறார்கள். தொடக்கத்தில் மதன் சர்ச்சை எழுந்த போது இன்ஸ்டாவிலும் யூ டியூப்பிலும் மதனின் விஸ்வாசம் மிகுந்த கட்டப்பாக்கள், கம்பு சுற்றியதை பார்க்க வேண்டுமே? ஆனால் வழக்கு கைது என நிலைமை ஒரு கட்டத்தில் சீரியஸ் ஆனதும் அவர்கள் சைலண்ட் மோடிற்கு திரும்பி விட்டார்கள்.

வெளியில் சீரியல் பார்த்து கொண்டிருக்கும் தனது அம்மாவிற்கு கேட்டு விடுமோ என அறையில் பயந்து பயந்து ”எவனும் என்னை எதுவும் செய்ய முடியாது என்கிற ரீதியில் கெட்ட வார்த்தை பேசி வீடியோ பதிவிடும் மதனை வீரன் என்று நம்பி பல பெண்கள் அவன் சொன்ன அனைத்திற்கும் ஓகே சொல்லி அவனிடம் சரணடைந்து இருக்கிறார்கள்.

குடிக்கு ஆசைப்பட்டு குழந்தையை கொன்ற குடிகார தாய்…

இன்று மதன் தேடப்படும் குற்றாவாளி. நாளை அவன் கைது செய்யப்படலாம். நாளை மறு நாள் அவனின் யு டியூப் பக்கங்கள் முடக்கப்படலாம். நீதிமன்றம் அவனுக்கு தண்டனை வழங்கலாம். ஆனால் மதனின் ஆணவம் குறையுமா என்றால் குறையாது. திமிர் அடங்குமா என்றால் அடங்காது. ஏனெனில் தண்டனைகளால் தவறுகளை திருத்த முடியும். நோயை அல்ல. ஆம் மதன் அகந்தையும் திமிரும் அளவுக்கு அதிகமாக உள்ள மன நோயாளி. எனவே மதன் போன்ற நோயாளிகளுக்கு தண்டனைகளோடு சேர்த்து சிகிச்சையும் முக்கியம்.

Exit mobile version