மதுரையில் 1986-ம் ஆண்டு சட்ட கல்லூரியில் பயின்றவர்கள் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை சட்டக்கல்லூரியில் 1986ஆம் ஆண்டு பயின்ற 120க்கும் மேற்பட்டவர்கள் தனியார் விடுதியில் சந்தித்துக்கொண்டனர். விஜய்சேதுபதி நடித்த 96 என்ற பட பாணியில் மதுரை அரசு சட்ட கல்லூரியில் சட்டம் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த ஆண்டில் பயின்ற மாணவர்களில், தற்போது 10க்கும் மேற்பட்டோர் நீதிபதியாகவும், அரசியலில் முக்கிய பொறுப்புகளிலும், மிகப்பெரிய அரசு வழக்கறிஞராகவும் இருந்து வருவதாகவும் தெரிவித்து மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். மேலும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர்.