பி.எஸ்.எஃப் உடற்தகுதித் தேர்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனைகளுக்கான உடல்தகுதித் தேர்வில் 1700க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1727 பெண்கள் பங்கேற்றனர். குளிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு நிலைகளிலான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றனர். இந்தப் பெண்களில் 443 பெண்கள் அடுத்தகட்ட தேர்வுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்காக சேவை செய்யத் தயாராக இருப்பதாக தேர்வில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.

Exit mobile version