கழுத்தளவு தண்ணீரை கூட பொருட்படுத்தாமல் பள்ளிக்கு செல்லும் ஆசிரியை

கழுத்தளவு தண்ணீரை பொருட்படுத்தாமல் பள்ளிக்கு செல்லும் பெண் ஆசிரியை.. ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியை…அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு.

சில தினங்களுக்கு முன்பு பினோதினியின் புகைப்படம் வைரல் ஆனது. அந்த புகைப்படத்தில் ஆசிரியை ஒருவர் வெள்ளத்தை பொருட்படுத்தாது, தலையில் பை சுமந்தவாறு ஆற்றைக் கடக்கிறார்… இதனை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள், பிறகு யார் அந்த ஆசிரியை என ஆராய்ந்தபோது பினோதினியின் பின்னனி பலருக்கும் தெரிய வந்தது..

3 கிலோமீட்டர் நடந்து, சப்புவா நதியை கடந்துதான் பள்ளிக்கு தினமும் செல்ல வேண்டுமாம் ,ஆனால் இதற்கெல்லாம் அஞ்சி வீட்டில் முடங்காத பினோதினி ,பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்னும் நோக்கில் எவ்வளவு இடற்பாடையும் தாண்டி பள்ளிக்கு சென்றுவிடுகிறார்.

ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் இருக்கும், `ரதியபலா தொடக்கப்பள்ளி’ ஒப்பந்த ஆசிரயராக பணியாற்றி வருகிறார் பினோதினி. பிறருக்கு சொல்லிக்கொடுப்பதிலேயே தன் வாழ்நாளை கழித்துவிட வேண்டும் என வாழ்ந்து வருகிறார். இவர் பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லையாம்.

Exit mobile version