தைபேயில் இருந்து டோங்காவ் தீவுக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்து

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் இருந்து டோங்காவ் தீவிற்கு புறட்டு சென்ற  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டின் ராணுவ தளபதி உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள சாங்சன் விமானப்படை தளத்தில் இருந்து டோங்காவ் தீவில் உள்ள ராணுவ தளத்துக்கு  சென்ற  யூஎச் 60 எம்  ரக ஹெலிகாப்டர், புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனையடுத்து 20-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள்  காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுத்தப்பட்டன. இந்நிலையில்,  நியூ தைபே சிட்டிக்கு அருகே உள்ள மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அந்நாட்டின் ராணுவ தளபதி ஷென் யி மிங் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் சீனாவின் சதி இருக்குமோ என தைவான் மக்கள் சந்தேகிக்கின்றனர்.  

Exit mobile version