ஒரு தலைக் காதலால் ஏற்பட்ட சோகம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே ஒருதலைக் காதலால் 17 வயது சிறுமியைச் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 50 வயதான ஜெயராஜ். இவர் ஆந்திர மாநிலம், விஜயநகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மாமல்லபுரம் பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் பெயர் லாவண்யா. ஆந்திராவில் பள்ளி படிப்பை முடித்த லாவண்யா தந்தைக்கு உதவியாக கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்.  ஜெயராஜ் வேலை செய்யும் பட்டிபுலத்தில் உள்ள கட்டிடத்தில் ஆந்திர மாநிலம், விஜயநகரத்தை சேர்ந்த 21 வயதான துர்காராவ் என்பவனும் வேலை செய்து வந்தான்.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள பள்ளியில் லாவண்யா படிக்கும் போதே அதே பள்ளியில் துர்காராவும் 12- ம் வகுப்பு வரை படித்து வந்திருக்கிறான். படிக்கும் காலத்திலேயே லாவண்யாவை துர்காராவ் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் லாவண்யா துரகராவின் காதலை ஏற்கவில்லை. இதனால் எப்படியாவது லாவண்யா தன்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று. லாவண்யாவின் பெற்றோரிடம் நல்லவன் போல் நடித்து அவர்களிடம் 6 மாதத்திற்கு முன்பு கட்டிட வேலைக்கு சேர்ந்தான். அதிலிருந்து லாவண்யாவிற்கு தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்திருக்கிறான் துர்காராவ்.  

லாவண்யா இவருடைய காதலை ஏற்காமல் உதாசீனப்படுத்தியதால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த துர்காராவ் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினான். கடந்த 26 ஆம் தேதி மீண்டும் தன்னுடைய ஒரு தலை காதலை ஏற்க வற்புறுத்திய துர்காராவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லாவண்யாவை குத்தினான். இதில் வயிறு, நெஞ்சு பகுதியில் 6 இடங்களில் கத்தி, குத்து விழுந்த நிலையில், ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து அவர் பரிதாபமாக இறந்தார்.

பிறகு தகவல் அறிந்து மாமல்லபுரம் உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவல்துறையின் மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலை வழியாக தப்பி ஓட முயன்ற துர்காராவை துரத்தி சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரு வேலை லாவண்யா துர்காராவ் பின்தொடர்வதை தைரியமாக பெற்றோரிடம் தெரிவித்து அவனை விரட்டியிருந்தால் இந்த கொலை தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.  

Exit mobile version