திறந்திருந்த வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை

தண்டாரம்பட்டு பகுதியில் திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 50 சவரன் நகை மற்றும் 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்துள்ள வரகூர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன், இவர் வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில், அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக வீட்டை பூட்டாமல் அவர் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 50 சவரன் நகை மற்றும் 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொளப்பட்டு வருகிறது.

Exit mobile version