ஆனால்..ரைசாவிற்கு அடிச்சது செம்ம லக் தான்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் மக்களிடையே பிரபலமான ரைசா, யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணோடு இணைந்து    ‘ பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படம் நடித்தார்.அத்திரைப்படமானது இளைஞர்களிடம் பெரும் வெற்றியை பெற்றது.அதனை தொடர்ந்து ‘ALICE’ என்ற திரைப்படத்தில் தற்போது ரைசா நடிக்கிறார்.இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான மணி சந்துரு இயக்குகிறார்.இவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்துள்ளது. மேலும் இது ஒரு திகில் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது.ரைசாவின் இரு கண்களும் கட்டப்பட்டுள்ளன நிலையில் ,உடலானது பூமியிலும் முகமானது வானத்திலும் காட்சியளிக்கிறது.மேலும் முயல் ஒன்று அருகில் நிற்பது போல் அமைந்துள்ளது.இதற்கான விடையை திரைப்படத்தை பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

image

தமிழ் திரையுலகில் எத்தனை படம் நடித்தாலும் கதாநாயகிகளுக்கு கதையில் வலு இருப்பது குறைவுதான்.சில திரைப்படங்களில் கடைசி வரை கதையில் ஒட்டாத ஒன்றாகவே கதாநாயகிகள் பயணிக்கின்றனர்.ஆனால் அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தான் தேர்வு செய்வார்கள்.அது அவர்களுக்கு தான் பொருந்தும் என்றும் கூட கூறலாம்.சில கதாநாயகிகள் பல வருடம் திரையுலகில் பயணித்தும் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் அமையாத நிலையில், தற்போது ரைசாவிற்கு இரண்டாவது படத்துலேயே கதைநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை களம் அமைந்திருப்பது செம்ம லக் தான்.

Exit mobile version