இரண்டரை வயது சிறுமியின் நினைவாற்றலால் கிடைத்த பரிசு

ஆரணியில் சிறுமியின் நினைவாற்றலை பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் வழங்கி கவுரவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வீராசாமி தெருவில் வசித்து வருபவர்கள் நித்தியானந்தம், திவ்யா தம்பதியினர். இவர்களுக்கு லித்திகா என்ற இரண்டரை வயது மகள் உள்ளார். இவர் 1 வயது முதலே அதிக நினைவாற்றலுடன், சொல்வதை திரும்ப சொல்லும் அளவிற்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வயது முதல் லித்திகாவின் தாய் திவ்யா அளித்த பயிற்சியின் பயனாக, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சிறுமி லித்திகாவின் திறமையான நினைவாற்றல் குறித்த சோதனை செய்தது. பின்னர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற அங்கிகாரம் செய்ததுடன், பதக்கம், சான்றிதழ், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை வழங்கி சிறுமி லித்திகாவை கௌரவித்துள்ளது.

Exit mobile version