விசா சிக்கலால் டெல்லி விமான நிலையத்தில் தங்கிய ஜெர்மனி நாட்டவர்…

எட்கார்ட் ஜீபாட் என்பவர் மீது குற்ற வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவானார். தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஜெர்மனி நாட்டு காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். கடந்த மார்ச் 18 ஆம் தேதி வியட்நாமில் இருந்து டெல்லி வழியாக எட்கார்ட் துருக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, டெல்லி விமான நிலையத்தில் அவர் பயணித்த விமானம் தரையிறங்கியபோது, கொரோனா பீதியால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், ஜீபாட் உட்பட ஏராளமான பயணிகள் டெல்லியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜீபாட்டை சொந்த நாட்டுக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்ட போது அவரை ஏற்க ஜெர்மனி அரசு மறுத்தது. அவர் தேடப்பட்ட குற்றவாளி என்பதால் இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 55 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்கியிருந்த அவர், நேற்று நெதர்லாந்து சென்ற விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டார்.

Exit mobile version