இந்தியாவில் கொரோனா தொற்றால் மேலும் 46,759 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 46 ஆயிரத்து 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 801 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடுமுழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் 46 ஆயிரம் 759 பேர் இந்த பெருந்தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேவேலை 24 மணி நேரத்தில் 509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தினமும் சராசரியாக 500 பேர் உயிரிழக்கும் நிலையில் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் தொற்றில் 70 சதவீதம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் மட்டும் 32 ஆயிரத்து 801 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று கூறுகிறது அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரம். கேரளாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version