விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத் துறையினர் தீ விபத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
தீயணைப்பு துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீ விபத்து மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளியில் ஒரு வகுப்பறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே ஓடினர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனம் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவை அனைத்தும் மாணவர்களுக்கு தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது. தீ விபத்து ஒத்திகை நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.