நெல்லை அருகே ஓடும் காரில் திடீர் தீ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டங்குளத்தைச் சேர்ந்த பாக்கியசெல்வம் என்பவர், உவரி அந்தோணியார் கோயிலுக்கு காரில் சென்றார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வரும்போது திடீரென எஞ்சினில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியசெல்வம் மற்றும் தனது குடும்பத்தினர் ஐந்து பேரும் காரில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் அந்த கார் மளமளவென பற்றி எரிய துவங்கியது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Exit mobile version