கும்பகோணத்தில் மின் சாதன பொருட்கள் விற்கும் கடையில் கடையில் தீ விபத்து

கும்பகோணத்தில் மின் சாதன பொருட்கள் விற்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மோதிலால் தெருவில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான மின் சாதன பொருள்கள் விற்கும் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வயர்கள், சுவிட்ச் உள்ளிட்ட 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version