நீர் கேட்டு அலைந்த மூதாட்டிக்கு, உணவு கொடுத்து பசியாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளரின் செயல் காண்போரை நெகிழச் செய்தது.
சென்னை தாம்பரம் தபால்நிலையம் அருகே, கடும் வெயிலின் காரணமாக மூதாட்டி ஒருவர் சாலையில் செல்பவர்களிடம் குடிக்க நீர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அப்பகுதியில் சென்ற மக்கள், அதை கண்டுகொள்ளாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த குரோம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மணிமேகலை, மூதாட்டியின் நிலையை பார்த்து தன்னால் முடிந்த உணவு மற்றும் நீர் வாங்கிச் சென்று கொடுத்தார். நீர் கேட்ட பாட்டிக்கு உணவளித்து, உறவினரைப் போல் கவனித்துக்கொண்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயல் காண்போரை நெகிழவைத்தது.