செந்துறை அருகே அரசின் மானியம் பெற்று, சம்பங்கி பூ சாகுபடியில் மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற்று வரும் விவசாயி ஒருவர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் என்ற விவசாயி, தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் தமிழக அரசு வழங்கும் 100% சதவீதம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் சம்பங்கி பூ சாகுபடி செய்து வருகிறார்.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 முதல் 60 கிலோ வரை சம்பங்கிப் பூக்கள் கிடைப்பதாகவும், 1 கிலோ சம்பங்கிப் பூ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாவதால் மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.
தற்போது கோடைகாலம் தொடங்கி வருவதால் சொட்டு நீர் பாசனம் மூலம் அவர், குறைவான நீர் செலவில் அதிகளவு சம்பங்கி பூ சாகுபடி செய்து வருகிறார்.
மேலும், தோட்டக்கலை மூலம் தனக்கு 100 சதவீத மானியம் வழங்கும் வேளாண்மைத் துறைக்கும் தமிழக அரசுக்கும் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.