தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட மானியத்தின் மூலம் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடியில் விவசாயி ஒருவர் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.
தமிழக அரசின் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை மூலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு மானியம் வழங்கி பசுமை குடில்கள் அமைக்க தமிழக அரசால் உதவி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி பாகற்காய் பந்தல், கோழிப்பண்ணை ஆகியவை அமைத்து விவசாயம் செய்து வருகிறார். குறிப்பாக தோட்டக்கலைத்துறை மூலம் சுமார் 9 லட்சம் ரூபாய் மானியம் பெற்று பசுமை குடில் அமைத்து வீரிய வெள்ளரி சாகுபடி மேற்கொண்டு வருகிறார்.
தோட்டக்கலைத் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் ஆலோசனைகளின் படி வெள்ளரி விவசாயம் மேற்கொண்ட அவர் சுமார் 20 முதல் 30 டன் வரை மகசூல் பெற்று உள்ளார் . ஒரு கிலோ வெள்ளரி தற்போது 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் தனக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.