எம்.ஜி.ஆருக்காக திருமணத்தை 3 ஆண்டுகள் ஒத்தி வைத்த ரசிகர்

எம்.ஜி.ஆருக்காக மூன்றாண்டுகள் கழித்து அவரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட அதிமுக தொண்டர், அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ராமு என்பவர், எம்.ஜி.ஆருக்காக மூன்று ஆண்டுகள் தனது திருமணத்தை தள்ளிப்போட்டதாக கூறியுள்ளார்.

வேலப்பாடியை சேர்ந்த ராமு, 1960-களில் எம்ஜிஆர் மன்றங்கள் உருவான போது, அதில் இணைந்து பணியாற்றி வந்தார். எம்.ஜி.ஆர் மீது இருந்த தீராத பாசத்தாலும், பற்றாலும், தனது திருமணத்தை நேரில் முன்னின்று நடத்தி வைக்க வேண்டுமென எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், வேலைப் பளு காரணமாக, அவரது தேதி கிடைக்காமல் இருந்ததால், ராமு தனது திருமணத்தை மூன்று ஆண்டுகள் தள்ளி வைத்துள்ளார். அதன் பிறகு 1976-ஆம் ஆண்டு, ராமு-கோடீஸ்வரி தம்பதியரின் திருமணத்தை எம்.ஜி.ஆர் முன்னின்று நடத்தி வைத்தார். இது குறித்து ராமு கூறுகையில், எம்.ஜி.ஆரின் நற்பெயருக்காக இன்று வரை உண்மையாக இருந்து வருவதாகத் தெரிவித்தார்.
 

Exit mobile version