தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளில் தயாராகி வருகிறார் ஹன்சிகா. அதில் முதலாவதாக திகில் கலந்த காமெடி கதையில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை ‘அம்புலி’ படத்தை இயக்கிய ஹரி சங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் ஆகியோர் இயக்குகின்றனர்.
ஏற்கனவே மலையாளப் படங்களில் நடித்துள்ள ஸ்ரீசாந்துக்கு தமிழில் இதுவே முதல் படமாகும். இந்த படம் 2020 மே மாதத்தில் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.