குழந்தை தொட்டிலில் படுத்திருக்கும் போன்ற பொம்மை ஒன்றை,நாய் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனிதர்களாகிய நாம் நமக்கு பிடித்த பொருள் மற்றவர்களிடம் இருந்தால் ,அதனை கேட்டு வாங்கிக் கொள்வோம். ஆனால் ஐந்தறிவு உடைய ஜீவன்கள் தனக்கு என்ன வேண்டும் என்று கூட கூற முடியாது.அப்படி வாயை திறந்து கேட்க முடியாமல் தனக்கு பிடித்த பொம்மை ஒன்றை நாய் தனது வாயால் தூக்கிச் செல்கிறது.
கிறிஸ்துமஸை முன்னிட்டு எல்லா வருடமும் அமெரிக்கா காவல்துறையால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படுவதற்காக பொம்மைகள் வாங்குவது வழக்கம்.இந்நிலையில் பொம்மைகள் அடிக்கடி காணாமல் போவதை அனைவரும் கண்கணித்துள்ளனர்.
யார் அந்தத் திருடன் என்று கண்காணிக்கும் போது, காவல்துறையில் பணி புரியும் நாய் தான் என்று தெரியவந்துள்ளது.அந்த நாய் தான் அங்கு வைக்கப்படும் பொம்மைகளை திருடி உள்ளது.
இம்முறை ஒரு குழந்தை தொட்டிலில் படுத்து இருப்பது போல் தோற்றமளிக்கும் பொம்மையை வாயில் கவ்விக் கொண்டு ஓடி, ஒரு மேசையின் அடியில் ஒளிந்து கொள்கிறது. இந்த நாயின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
YOU GUYS.
THE DOG AT THE FRANKLIN POLICE DEPARTMENT IS STEALING THE TOYS FOR KIDS AND KEEPING THEM FOR HERSELF! JANET!
— Danny Deraney (@DannyDeraney) December 21, 2019