மென்பொறியாளரை காரில் கடத்தி கத்தி முனையில் கொள்ளையடித்த திமுக பிரமுகர்

மென்பொறியாளரை காரில் கடத்தி நிர்வாணப்படுத்தி கத்தி முனையில் கொள்ளையடித்த திமுக பிரமுகர், சிறையில் இருந்து வெளியே வந்ததை, திமுகவினர் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கே.கே. நகர் எட்டாவது  செட்டர் 45 வது தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகுமார் இவருக்கு வயது 30. கடந்த மாதம் 31ஆம் தேதி மாலை, சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலிற்கு செல்போன் வாங்குவதற்காக, ரேபிடோ செயலியில் இருசக்கர வாகனம் முன்பதிவு செய்து விட்டு வீட்டின் அருகே காத்திருந்தார். அப்போது காரில் வந்து மூன்று பேர், மழை பெய்வதால் இருசக்கர வாகனத்தில் பிக்கப் செய்வது கடினம் என்றும் அதனால் காரை எடுத்து வந்துள்ளோம் எனவும் ஸ்ரீகுமாரிடம் கூற, இதனை நம்பி, ஸ்ரீகுமாரும் காரில் ஏறியுள்ளார்.

விஜயா ஃபோரம் மாலுக்கு செல்வதற்காக பதிவு செய்த நிலையில் கார் அங்கு செல்லாமல் கிண்டி நோக்கி சென்றதால், பதற்றமடைந்த ஸ்ரீகுமார் அதுகுறித்து கேட்டுள்ளார். உடனே அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, அவரை நிர்வாணப்படுத்தி பணத்தை கேட்டதால், செய்வதறியாமல் தன்னிடம் இருந்த 11ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் அதே காரில் ஸ்ரீகுமாரை அவரது வீட்டில் இறக்கி விட்டு பறந்தது கொள்ளை கும்பல். இது குறித்து, ஸ்ரீகுமார் பிறகு கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்…

உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் கே.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரேமா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை வைத்தும் காரின் எண்ணை வைத்தும், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக இலக்கிய அணி பகுதி அமைப்பாளரான தமிழ்ச்செல்வன், மற்றும் மணிகண்டன், சரவணன் ஆகிய மூவரையும் 10மணி நேரத்தில் கைது செய்து அவர்களிடமிருந்து கார், கத்தி மற்றும் 11ஆயிரம் ரொக்கத்தை மீட்டனர்.

இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த திமுக பிரமுகர் தமிழ்ச்செல்வனுக்கு திமுகவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரின் பிறந்த நாளான அன்று திமுக இலக்கிய அணி பகுதி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் ஆடர் செய்த 18 கிலோ கேக்கை வெட்டி கொண்டாட முடியவில்லை என்று, திமுகவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மேலும் கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்தும் அவர் வாழ்த்து பெற்றுள்ளார். கைது செய்த காவல்துறை அதிகாரிகளிடம்  பறிமுதல் செய்த செல்போனை கேட்டும் திமுகவினர் மிரட்டி உள்ளனர். காவல் நிலையத்திலும் கையெழுத்து போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

பொதுவெளியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையன் வெளியே வந்ததும் திமுகவினர் கேக்வெட்டி கொண்டாடுவதாலும், தலைவர்களை சந்தித்து ஆசி பெறுவதாலும், கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கூடாராமாக திமுக திகழ்கிறதா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்

Exit mobile version