திருவண்ணாமலையில் பச்சை மிளகாய் விளைச்சல் குறைவாக இருந்தாலும் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.அந்த வகையில் பச்சை மிளகாயை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் பனியின் தாக்கத்தால் மகசூல் குறைவாக உள்ளது. இருந்தாலும் ஒரு கிலோ மிளகாய் 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையாவதால் போதிய வருமானம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், மிளகாய் செடியில் ஊடுபயிராக சிறிய வெங்காயத்தை பயிரிட்டால் கூடுதல் வருமானம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post