கோல்ஃப் மைதானத்தில் ஜாலியாக வலம் வரும் முதலை

கோல்ஃப் மைதானத்தில் வீரர் ஒருவர் விளையாடி கொண்டிருக்கும் போது முதலை ஒன்று சர்வ சாதாரணமாக கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஆர்லாண்டோ நகரத்திலுள்ள கோல்ஃப் மைதானம் ஒன்றில் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முதலை ஒன்று மிகச் சாதாரணமாக மைதானத்தை கடந்து சென்றது. சுமார் 7 அடி நீளம் கொண்டதாக இந்த முதலை இருந்தது.

கோல்ஃப் விளையாட்டை சற்று நேரம் பார்த்துவிட்டு அருகில் உள்ள ஏரிக்குள் சென்று முதலை மறைந்து கொண்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தற்போதெல்லாம் முதலைகளை ஊருக்குள் அடிக்கடி பார்க்க முடிவதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும். சில நாட்களுக்கு முன்பாக முதலை ஒன்று கடற்படை பயிற்சி மைதானத்தின் வேலியை குதித்து உள்ளே சென்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version