ஆந்திர மாநிலம் குண்டூரில், IVF சிகிச்சை முறையில் 70 வயதை கடந்த தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணமாகி 57ஆண்டுகள் குழந்தை இல்லாததால், இத்தம்பதியினர் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ள, பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதன் பயனாக, 74 வயதான மங்கயம்மா, இரட்டை பெண் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளார். உலகிலேயே அதிக வயதில் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.