7 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

தேனி, அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து, அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று தேனி, அரியலூர், தருமபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர் மற்றும் திருப்பூர் புறநகர்  நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றிபெறுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

இதேபோல், சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர் மற்றும் ஈரோடு புறநகர் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version