காவல் துறையினருக்கு இனி வாரத்தில் ஒருநாள் விடுமுறை

கடந்த மாதம் ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே சமயத்தில் நடைபெற்றது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்னர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கு வார விடுமுறை வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்.

தற்போது ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் ஆந்திராவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏனெனில் இதுவரை காவல்துறையினருக்கு வார விடுமுறை என்பதே இல்லை. மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, என்பதே விடுமுறையின் அம்சங்களாக இருந்தன.

தற்போது இந்த விடுமுறை அறிவிப்பால் காவல்துறையின் அனைத்து தரப்பினர் வரை எல்லோருக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் தங்கள் குடும்பங்களோடு நேரம் செலவழிக்கவும், அவர்களின் பணி அழுத்தம் குறையும் என்பதால் காவல் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version