திருப்பதி புறநகரில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக 95 இடங்களில் புகார் பெட்டி அமைக்கப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அன்பு ராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் திருப்பதி திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் அன்பு ராஜன் புகார் பெட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். பொதுமக்களும், பக்தர்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் மற்றும் அனைத்து விதமான புகார்களையும் இந்த புகார் பெட்டியில் பதிவு செய்யலாம் எனவும், பாலியல் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான புகார்களையும் இந்த புகார் பெட்டியில் தெரிவிக்கலாம் எனவும் அன்பு ராஜன் தெரிவித்துள்ளார். பஸ் நிலையம், ரயில் நிலையம், தேவஸ்தான பக்தர்கள் ஓய்வறைகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் இந்த புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.