குழந்தையை சுமந்துகொண்டு பாடமெடுத்த கல்லூரி பேராசிரியை

அமெரிக்காவிலுள்ள சார்ஜியா கவினெட் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் ரமடா. இவர் வழக்கம் போல கல்லூரியில் பாடமெடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பயிலும் மாணவி ஒருவருக்கு வீட்டில் கவனிக்க ஆள் இல்லாததால் அவரது குழந்தையை கல்லூரிக்கு எடுத்து வரச்சொல்லி அனுமதியளித்துள்ளார்.

ஆனால் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பாடம் கவனிப்பது, நோட்ஸ் எடுப்பது கடினமாக இருந்துள்ளது. இதனைப் பார்த்த ஆசிரியை ரமடா, குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு சுமார் 3 மணி நேரம் பாடமெடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ரமடாவின் மகள் அன்னடோட், “எனது அம்மாவே எனக்கான ரோல் மாடல் என்றும், இந்த உலகத்தையே தன் மகளாக நினைக்கும் அம்மாவை பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

Exit mobile version