கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை தடுப்புச்சுவரில் மோதிய பேருந்து

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. மைசூரிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று 9-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தாக்கின் ஓரத்தில் மோதி நின்றது. ஓட்டுனர் உடனடியாக கீழே குதித்து பேருந்தின் சக்கரங்களுக்கு கல் மற்றும் மரக்கட்டைகளை அடியில் கொடுத்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுவதை நிறுத்தினார். பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டதுடன் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இந்த நிகழ்வால் திம்பம் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டது.

Exit mobile version