நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.
குமாரப்பளையம் அருகேயுள்ள அருவங்காடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான கோபாலகிருஷ்ணன், ராஜா இருவரும் தங்களது தாயருடன் வசித்து வருகின்றனர். இதில் அண்ணன் கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் தினசரி தம்பியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் வாடிக்கையாகி உள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கோபாலகிருஷ்ணன், ராஜாவை தகாத வார்த்தைகால் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா, அருகிலிருந்த மரக்கட்டையால் கோபாலகிருஷ்ணனை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை மீட்ட அக்கம்பக்கத்தினர், அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழக்க, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.