திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் பகுதியை சேர்ந்த நர்மதா என்ற 19 வயது இளம் பெண், பொன்னேரி அரசுக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சௌந்தரும் காதலித்து வந்துள்ளனர். நர்மதா கர்ப்பமடைந்த நிலையில், 9 மாத கர்ப்பிணியான அவரை இருசக்கர வாகனத்தில் வைத்து ஈகுவார்பாளையம் காப்புகாட்டிற்கு சௌந்தர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் நர்மதாவுக்கு சுயமாக சௌந்தரே பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தபோது குழந்தை இறந்த நிலையில் கை மட்டும் வெளியில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆபத்தான நிலையில், நர்மதா சென்னை ஆர்ஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்த நிலையில் வயிற்றில் கிடந்த ஆண் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இது பற்றி தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் சௌந்தரை கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.
காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன்: குழந்தை வயிற்றிலேயே இறந்ததால் வழக்குப்பதிவு
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023