இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகி விட்டனர் என்பதில் மாற்று கருத்தில்லை.தான் கெடுவதோடு அருகில் இருப்பவர்களும் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிப்பு அடைக்கின்றனர்.தனது குழுந்தைகளின் மீது பெற்றோர்கள் அக்கறை கொண்டதால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து மிகவும் வருத்தமடைகின்றனர்.
காலையில் விழிப்பது முதல் இரவு தூங்கும் வரை பப்ஜி விளையாடுகின்றனர்.ஸ்மார்ட் போன் என்பது தற்போது அனைவருக்கும் எளிதில் வாங்கும் பொருளாக மாறிவிட்டது.எனவே,இளைஞர்கள் கையில் தனக்கென ஒரு மொபைலை வைத்துக்கொண்டு அதிலேயே முழுகிவிடுகின்றனர்.
சமீபத்தில் தனது திருமணத்தின் போதே இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திருமண பெண் இவர் பப்ஜி விளையாடுவதை பார்த்துகொண்டு இருக்கிறார்.அதனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் பப்ஜி உலகத்தில் மூழ்கிவிட்டார்.பின்னர் திருமணத்திற்கு வந்தவர் அன்பளிப்பு வழங்குவதை தட்டிவிட்டு மீண்டும் பப்ஜி விளையாடுகிறார்.இந்த வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.