டுவிட்டர் சமூக இணையதளத்தில் ‘மஹிந்திரா’ மோட்டார் வாகன நிறுவனங்களின் உரிமையாளர் ஆனந்த் மகிந்திரா ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடைக்குப் போய்விட்டு திரும்பி வரும் சிறுவன் ஒருவன், வழியில் இருந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து, அப்போது வரும் எச்சரிக்கை ஓசைக்கு ஏற்றபடி நடனமாடுகிறான். தன்னை தரையில் விழுந்து சிரிக்க வைத்த வீடியோ இது என்று, ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டு உள்ளார். இவரைப் போலவே பலரையும் சிறுவனின் இந்த குறும்புத்தனம் வெகுவாக ஈர்த்து வருகிறது.