மதுரையில் தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் : இளைஞர் கைது

மதுரை அருகே கடந்த சனிக்கிழமை நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பான விசாரணையில், எதிர் ரவுடி கும்பலை கொலை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மகாலட்சுமிபுரம் அடுத்த மதுரை- போடி தண்டவாளம் அருகே கடந்த சனிக்கிழமை நாட்டு வெடி குண்டு வெடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அப்பகுதியில் குப்பைகளை கொட்டிச் சென்ற முத்து எனும் முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது பேரன் பிரவீன் குமார் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை, குப்பை என நினைத்து தண்டவாளம் அருகே கொட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரவீன் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரையை சேர்ந்த பிள்ளையார் கணேசன் என்ற எதிர்கும்பலை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

Exit mobile version