காரைக்கால் அருகே, மீனவர் கிராமத்தில் நடைபெற்ற படகுப் போட்டியில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
நவம்பர் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படும் உலக மீனவர் தினத்தையொட்டி காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தை அடுத்துள்ள பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் படகுப் போட்டி நடைபெற்றது. திருமலைராஜன் ஆற்றில் நடைபெற்ற இந்த படகு போட்டியினை பட்டினச்சேரி கிராம மக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். போட்டியில் பங்கேற்ற மீனவ இளைஞர்கள் படகுகளை உற்சாகத்துடன் ஆற்றில் வேகமாக செலுத்தி முன்னும், பின்னுமாக முந்தியடித்துச் சென்றது பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்தது. போட்டியின் நிறைவாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.