ஹாலிவுட்டில் தயாராகும் ‘மைக்கேல் ஜாக்சன்’ வாழ்க்கை வரலாறு

மறைந்த அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை ஹாலிவுட்டில் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் அளவிற்கு அவர் குறித்த சர்ச்சைகளும் புகழ் பெற்றவை. மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார். இன்றளவும் அவரது மரணம் மர்மமாகவே உள்ளது.

ஆனாலும் இன்றளவும் இவரது இசைக்கும், நடனத்திற்கும் என உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட்டின் திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை 4 ஆஸ்கர் விருதுகளை பெற்ற “பொஹிமியன் ராப்சோடி” படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார் எனவும், படத்தை எடுப்பதற்கான அனைத்து உரிமத்தையும் தயாரிப்பு நிறுவனம் பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் கதை மைக்கேல் ஜாக்சனின் சிறு வயது முதல் இறப்பு வரை, அவரது இசை பயணத்தை மட்டும் மையமாக கொண்டு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version