சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாலமலை புளியம்பழங்களின் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியின் பாலமலையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளியம்பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, போதிய மழை இல்லாததால், விளைச்சல் குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு பாலமலையில் நல்ல மழை பெய்ததால், புளியம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பூலாம்பட்டி வார சந்தையில், இம்மாத துவக்கத்திலிருந்தே புளியம்பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இந்த புளியம்பழங்கள், ஒரு கூடை 900 ரூபாயிலிருந்து, ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. நல்ல சதைப்பற்றுடன், உணவுக்கு கூடுதல் சுவையை கொடுக்கும் இந்த புளியம்பழங்கள், அனைத்து தரப்பினரின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது.