தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 24 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான இக்குழுவில், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், யுனிசெப் அதிகாரி  உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கொரோனா வைரசால் முடங்கியுள்ள தொழில்துறைகளை மீட்டெடுப்பது, பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்த ஆலோசனைகளை இக்குழு அரசுக்கு தெரிவிக்கும். மேலும், 3 மாதங்களுக்குள் இக்குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version