16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013ம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த வேன் ஓட்டுநரான சையத், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டுநர் சையத், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி லிங்கேசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சையத்திற்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.