திருப்பதியில் நின்று கொண்டிருந்த காருக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு

திருப்பதியில் நின்று கொண்டிருந்த காருக்குள் 10 அடி நீள பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதியில், தரிசனத்திற்காக வந்திருந்த தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக மலையேறிச் சென்றனர். அப்போது ஜிஎன்சி சுங்கச்சாவடி அருகே பக்தர் ஒருவரின் கார் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த சுமார் 10 அடி நீள பாம்பு ஒன்று கார் என்ஜின் பகுதிக்குள் புகுந்தது. இதை கவனித்த சிலர் சத்தம் போட்டு டிரைவருக்கு தெரிவித்தனர். தகவலறிந்த தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் விரைந்து சென்று, போராடி பாம்பை மீட்டுச்சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.

Exit mobile version